Tuesday, November 27

நமசிவாய வாழ்க: நானே கடவுள்! அஹம் ப்ரஹ்மாஸ்மி!

நமசிவாய வாழ்க: நானே கடவுள்! அஹம் ப்ரஹ்மாஸ்மி!:


சிந்தையிலே சிவனை வைத்து


சிந்தையிலே சிவனை வைத்து 
செயலிலே கண்ணை வைத்தால் 
செய்யும் தொழில் வெற்றி தானே 

தவம் ஏதும் செய்யாமல் 
வரம் ஒன்று கேட்கிறேன் 
வேலை எதுவும் செய்யாமல் தாயிடம் 
கூழை கேட்கும் குழந்தையை போல் 

இப்பொல்லா வினையேனின் சிந்தையிலே 
எப்பொழுதும் எழுந்தருள வேண்டுகிறேன் 

சிவாய நம ! சிவாய நம !! சிவாய நம !!!

Sunday, November 25

அறிவு தெளிவு வேண்டும் பராபரமே

                     அறிவு தெளிவு வேண்டும் பராபரமே

             குழப்பம் ஏற்படும் சமயம் உன்னை சரணடைந்த

                     உண்மையை உரைக்க வேண்டும்

                   எக்கணமும் விழிப்பு நிலையை தந்தருள வேண்டும் பராபரமே

                          ஆதியும் அந்தமும் ஆனாய் போற்றி

                         மெய் கண்டு உணர்வார்க்கு உற்றோன் போற்றி

                         மெய்பொருள் கான்பிப்போன் போற்றி

                     போற்றி போற்றி! போற்றி போற்றி!! போற்றி போற்றி!!!

Saturday, November 17

நீயல்லால் எனக்கு தெய்வமில்லை

தாயிற் சிறந்த கோவில்லில்லை 
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை

இதை விடவும் ஒரு வாக்கியம் வேணுமோ மானிடராய் பிறந்த மனித உயிர்களுக்கு. இவ் வாக்கியங்களை மனித உயிர்கள் உய்யும் பொருட்டு வழங்கியோர் இறைவனை தவிர வேறு யாரும் இருக்க முடியாது.  இவ்வாக்கியங்களின் அர்த்தத்தை புரிந்து கொள்வோன்னின் முன் வினை பதிவுகள் நீங்கி இருக்கும். அதை உணர்ந்து கடைபிடித்து வாழ்வோனுக்கு மறு பிறப்பு இல்லை. இவனை பெம்மான் சிவபெருமான் விரும்பி மகிழ்ந்து ஏற்று கொள்வார்.

Sunday, November 11

கண்டேன்

முதல் முறையாக இன்று ஐப்பசி மாத தேய்பிறை துவாதசி சந்திரனை அதிகாலையில்  பார்த்தேன். மிக அழகு. எம்பெம்மன் சடை மீது வைத்திருக்கும் சந்திரன் மிக அழகு. அதி காலையில் எழுவதனால் தான் எத்தனை பயன்கள். இன்று காலை  10.45 கு பிறகு தேய்பிறை திரயோதசி திதி ஆரம்பம். ஐப்பசி மாத தேய்பிறை பிரதோஷத்தில் பெம்மானை வணங்கி தாள் பணிவோம்.

Saturday, November 10





சிவன்மந்திர உச்சாடணங்கள்



மந்திரங்களை கைளாளும் முறையாவது, அமைதியான காற்றோட்டமுள்ள இடம் அல்லது கோவில் போன்ற இடங்களில் அமர்ந்து மனதை வெறுமையாக்கி, முதலில் தங்கள் குலதெய்வத்தினை வணங்கி, பின் பெற்றோரையும், குருவினையும் மனதால் துதித்து மூலமந்திரத்தை மனதில் உச்சரிக்க வேண்டும்.முதலில் குறைந்தது 108 அல்லது 1008 முறை விடாது உச்சரித்தல் அவசியம்.

அதன் பின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனதினை ஒரு நிலைப்படுத்தி மந்திரங்களை உச்சரிக்கலாமென்கிறார்கள். எண்ணிக்கை கணக்கிற்காக ஜெப மாலைகளை உயயோகிக்கலாம்.இவ்வாறு தொடர்து உச்சரிக்கும் போது அந்தமந்திரங்கள் நமக்கு சித்திக்கின்றன என்கிறார்கள்.பின் எப்போது தேவையேற்படுகிறதோ அச்சமயத்தில்தேவையான மந்திரங்களை 9 அல்லது 21 தடவை உச்சரிக்க மந்திரம் பலிக்குமாம். இனி மந்திரங்கள்....

தத்புருஷ மந்திரம்

இதன் மூல மந்திரம் 'நமசிவாய' இதை விடாது உச்சரிக்க உச்சாடணம் ஏற்படும். தத்புருஷத்தில் கருவூரார் 25 மந்திரங்களைச் சொல்கிறார், பதிவின் நீளம் கருதி ஐந்தினை தருகிறேன்.

"நமசிவாயம் லங்க நமசிவாய" என உச்சரிக்க மழை பெய்யுமென்கிறார்.

"அலங்கே நமசிவாய நமோ" என உச்சரிக்க புகழ் உண்டாகுமாம்.

"அங் சிவாய நம" என உச்சரிக்க குழந்தைப் பேறு உண்டாகுமாம்.

"ஊங்கிறியும் நமசிவாய நமா" என உச்சரிக்க மோட்சம் கிட்டுமாம்.

"ஓம் நமசிவாய" என உச்சரித்தால் காலனை வெல்லலாம்.அகோர மந்திரம்

இதன் மூல மந்திரம் "நமசிவ",

"சங் கங் சிவாயநமா" என உச்சரிக்கஜீவனில் சிவத்தைக் காணலாம்.

"மங் மங் மங்" என உச்சரித்தால் உணவை வெறுத்து பசியை துறக்கலாம்.

"வசாலல சால்ல சிவாய நமா" என உச்சரித்தால் மழையில் நனையாமல் செல்லலாம்.

"சரனையச் சிவாய நம" என உச்சரிக்கவானில் பறக்கலாமாம்.

"கேங் கேங் ஓம் நமசிவாயம்" என உச்சரிக்க எல்லோரும் வசியமாவர்.

"ஓங் சருவ நம சிவாய" என உச்சரிக்க மழை உண்டாகும்

வாமதேவ மந்திரம்

"கங்கங்ணங் நிஷர் சிவிங்கம்" என உச்சரித்தால் காமதேவன் அருள் கிட்டுமாம்.

"வங் வங் சிங் சிவாய நம"என உச்சரிக்க உலகின் எப்பாகத்திற்கும் வழி தெரியுமாம்.

"சதா சிவாய நம" என உச்சரிக்க நான்கு வேதத்தின் பொருள் அறியலாம்.

"ஓம் அங்கிஷ ஊங் சிவாயநம" என உச்சரிக்க நினைத்த இடத்தில் மனதினை விரைவாக செய்யலாம்.சத்யோசாத மந்திரங்கள்

"சிவாய ஓம்" என உச்சரிக்க திருமாலில் ஆற்றல் கிட்டும்.

"ஓங் உங் சிவாய ஓம்" என உச்சரிக்க குண்டலினியின் சக்தியை காணலாம்.

"கிருட்டிணன் ஓம் சிவாய நம" என உச்சரிக்க இராவணன் மலையைப் பெயர்த்த பலம் கிட்டும்ஈசான மந்திரங்கள்

"சிமிறியும் ஊங்சிவாய ஊங் அங் நம ஓ" என உச்சரிக்க சிவதத்துவத்தை காணலாம்.

"மங் நங் சிவ சிவாய ஓம்" என உச்சரிக்க நந்தியின் தத்துவத்தை உணரலாம்.

"வங் யங் சிங் ஓம் சிவாய" என உச்சரிக்க எதிரியின் உடல் தனலாகும்.

"சிங் சிங் சிவாய ஓ" என உச்சரிக்க முக்காலத்தையும் உணரலாம்.

"மய நசிவ சுவாக" உச்சரிக்க ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்களின் ஆசி கிட்டும்.நேரம் கிடைத்தால்/மனமிருந்தால் இவற்றை முயற்சித்துப் பாருங்கள்.

ஓம்நமசிவாய!

ஓம்நமசிவாய!




நண்பர்களின் வலைபூக்களில் இருந்து


சிவ மந்திரங்கள்

சிவ மந்திரங்களைப் பார்ப்போம்:ஓம் ஜகங் என தினமும் 108 முறை ஜபித்தால் கணபதியின் அருள் கிட்டும்.ஓம் நமசிவாய என்று ஜெபித்தால் காலனை வெல்லலாம்.ஓம்நமசிவாய நமா என ஜெபித்தால் பூதக்கூட்டங்கள் வசமாகும்.துஷ்ட தேவதைகள் அழியும். மன்னர்கள் அருள் கிடைக்கும். ஓம் நூம் பயப்யுஞ் சிவாய நமா என்ற மந்திரத்தை ஜபித்தால் துன்பங்கள் விலகும்.ஆறு சாஸ்திரங்களையும், நான்கு வேதங்களையும் அறிய உதவும்.சிவாய ஓம் என்று சொன்னால் திருமாலின் ஆற்றல் கிட்டும். மய நசிவ சுவாகா என ஓதினால் ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்கள் கீழிறங்கிவந்து சுமனக்குளிகை தருவார்கள்.இங் சிங் ச்ங் ஓம் என்ற ஈசான மந்திரத்தை தனக்கு ஆபத்தான வேளைகளில் சூரியனுக்கு எதிராக நின்று கைகளை மேலே உயர்த்தி ஜபிப்பவன் எல்லா பாவங்களிலிருந்து முழுமையாக நீங்குவான்.சிங் சிங் சிவாய ஓ எனஜபித்துவந்தால் முக்காலமும் அறியும் ஆற்றல் உண்டாகும்.ஓங்கிறியும் ஓம் நமச்சிவாய என சொன்னால் வியாபாரம் நன்றாக நடக்கும்.சவ்வும் நமசிவாயநமா என ஜபித்தால் அரச போகம் கிட்டும்.மந்திர ஜபம் பற்றி சித்தர்கள் கூறியிருப்பது:மசிவயந ஜபித்தாலும்,நயவசிம ஜபித்தாலும் மோகனம் உண்டாகும்-அகத்திய மகரிஷிசிவாயநம ஜபித்தால் மோகனம் உண்டாகும்-நந்தீசர் மகரிஷி
ோதிடம்
FM
சிங் நமசிவய என்று உச்சரிக்க - பயிர்களால் நன்மை.
துங் நமசிவாய என்று உச்சரிக்க - வித்துவான் ஆகலாம்.
ஓங் கங்சிவய என்று உச்சரிக்க - சக்தி அருள் உண்டாம்.
ஓம் சிங்சிவாய என்று நம என்று உச்சரிக்க - நினைப்பது நடக்கும்.
ஓம் பங்சிவாய நம என்று உச்சரிக்க - தடைகள் நீக்கும்.
ஓம் யங்சிவாய நம என்று உச்சரிக்க - துன்பங்கள் விலகும்.
ஓம் மாங்நமசிவாய என்று உச்சரிக்க - செல்வம் செழித்தோங்கும்.
ஓம் மங்சிவாயநம என்று உச்சரிக்க- கவலைகள் வற்றும்
கெங்ஓம் நமசிவாய என்று உச்சரிக்க - வசிய சக்தி மிகும்
ஓம் மங்யங் சிவாய என்று உச்சரிக்க - விஷங்கள் இறங்கும்.
அங் ரங்ஓம்சிவாய என்று உச்சரிக்க - சாதனை படைக்கலாம்.
ஓங் அங் சிங் சிவாயநம என்று உச்சரிக்க - சப்த கன்னியர் தரிசனம்.
ஓங் வங்சிங் சிவாயநம என்று உச்சரிக்க - முக்குணத்தையும் வெல்லலாம்.
ஹிரீம் நமசிவாய என்று உச்சரிக்க- அரிய பேறுகள் கிடைக்கும்.
ஐயுஞ் சிவாயநம என்று உச்சரிக்க - ஆறு சாஸ்திரம் அறியலாம்.
வங்சிங் ஓம்சிவாயா என்று உச்சரிக்க - தேவர்கள் தரிசனம் காணலாம்.
சங் சிவய நம என்று உச்சரிக்க - விஷ பாதிப்பு நீக்கும்.
ஓம் துங்சிவாய நம என்று உச்சரிக்க - முத்தொழிலும் சிறக்கும். ஸ்ரீலம்ஹரீம் ஓம் நமசிவாய என்று உச்சரிக்க- பெரியபூமிகள் கொடுக்கும்.
சிங் நமசிவய என்று உச்சரிக்க - பயிர்களால் நன்மை.
வங் சிவய நம என்று உச்சரிக்க - மழை நனைக்காது.
சிவாய ஓம்ஸ்ரீ என்று உச்சரிக்க - மழை நிற்கும்.
கலியுங் சிவாய என்று உச்சரிக்க - வெள்ளம் பெருக்கெடுக்கும்.
ஓம் கங்சிவ்வுங்சிவய என்று உச்சரிக்க - பெரியகாரியங்களில் வெற்றி. சங்யவ் சி மந என்று உச்சரிக்க - தண்ணீரில் நடக்கலாம்.
மங் நங் சிங் சிவய என்று உச்சரிக்க - பிசாசு, பேய் சரணம் செய்யும்.



எமக்கு தோன்றிய வரிகள்- ஞாயிறு போற்றுதுவோம் ! ஞாயிறு போற்றுதுவோம் !!


வானம் செவக்கிறது 

ஓவியம் தீட்ட எத்தனித்து வண்ணக் கலவை ஒன்றைக்கலக்கின்றது
கலவையே ஓவியமாய் என் கண்களில் மிளிர்கின்றது
பின்புதான் புரிகின்றது 
அவை சூரியனைவரவேற்கக் கலக்கப்பட்டிருக்கும் ஆழத்தி என்று
மரியாதை கிடைத்த பிறகு சூரியனும்தன் 
வெப்பத்தை அருளை குறைவின்றி கொடுக்கின்றது
ஞாயிறு போற்றுதுவோம் ! ஞாயிறு போற்றுதுவோம் !!