Thursday, September 24

பண்ணிய தவம் கை விடாது தொடரும்

சுடர்மணிக் குழையும் மலர்க்கரத்(து) உழையும் 
 தும்பிகள் இடைஇடை நுழையும் 
   தும்பைமா லிகையும் வம்புவார் சடையும் 
 துண்டவெண் பிறையு(ம்)முந் நூலும் 
நடநபங் கயமும் கிரணகங் கணமும் 
 நங்கைபங்(கு) அமர்ந்தசுந் தரமும் 
   நயன(ம்)மூன்(று) உடைய கோலமும் கண்டோர் 
 நமனையும் காணவல் லவரோ? 
கொடிபல தொடுத்த நெடியமா மணிப்பொற் 
 கோபுரம் *பாரிடம் தொடுத்துக் 
   கொழுந்துவிட்(டு) எழுந்து வான்நில(வு) எறிப்பக் 
 கொண்டல்வந்(து) உலவியே நிலவும் 
கடிமலர்த் தடமும் சுருதிஓ திடமும் 
 கன்னிமா மாடமும் சூழ்ந்து 
   கநவளம் சிறந்த ++கடவைஅம் பதியாய்!
 காலனைக் காய்ந்ததற் பரனே!

*பாரிடம் = பூதகணம்.  ++கடவை = திருக்கடவூர்.

இந்த பாடல் அபிராமி பட்டர் அருளிய திருக்கடவூர் காலசம்கார மூர்த்தி பதிகத்தின் முதல் பாடல். முழுப்பொருளும்  அறியும் அறிவு இல்லையெனினும் சிவன் அவன் நம்மை அருளுவதை உணர முடியும். பண்ணிய தவம் கை விடாது தொடரும்.

Sunday, September 20

தேடுதல் முடித்தல்

மனித வாழ்வு கிடைக்க எவ்வளவு  தவம் செய்திருப்போம். கிடைத்ததும் இறைவனனின் அடியை பிடித்து அவனை அடைய எவ்வளவு தவம் செய்திருப்போம். நம் வாழ்வை முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்து நம் தேடுதல் அனைத்தும் அவனை அடைவதே என்னும் நிலை வரும் வரை உலகில் பிறப்பை பெற்றுக்கொண்டே இருக்கிறோம். இறைவனை அடைவதற்கு நமக்கு உள்ள தூரம் ஒரு இம்மி அளவு என்று நினைக்கும் போது அவன் கருணையை நினைத்து கண்ணீர் விட வேண்டும். இம்மி அளவு தூரம் கடக்க பலப் பல பிறப்புகள் ? காரணங்கள் நம் தேடுதல் இறையை அடைவதை பற்றி இல்லையே. துருவன் ஏழு நாட்களிலே இறைவனை அடைந்த்தார் என்று புராணம்  கேட்கும் போது மனதிற்குள் ஒரு நம்பிக்கை நாமும் என்றாவது ஒரு நாள் நம் தேடலை முடித்து நம்  இறைவனை அடைவோம்.